Grade 2

நிலை 2
நிலைக் குறிப்புகள்
வயது வரம்பு:

குறைந்த பட்சம் 6 வயது.

தகுதி:

நிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

நோக்கம்:

தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.
பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.

மொழித்திறன்:

தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.
ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.
உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல்.