Grade 4

நிலை 4
நிலைக் குறிப்புகள்
வயது வரம்பு:

குறைந்த பட்சம் 7 வயது.

தகுதி:

நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள்,சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

நோக்கம்:

மொழித்திறன்:

சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.

சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.

சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.

சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.

இலக்கணம்:

பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.

அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.

கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.