Grade 5

நிலை 5
நிலைக் குறிப்புகள்
வயது வரம்பு:

குறைந்த பட்சம் 8 வயது.

தகுதி:

நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல்,பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.

நோக்கம்:

உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல்.
அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.

மொழித்திறன்:

வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.
வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.
திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.

இலக்கணம்:

பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல்.

வினைப்பாகுபாடுகள் (verb classes)
பெயரடை (adjective)
வினையடை (adverb)
எதிர்மறை வினையச்சம் (negative infinitives)
நிபந்தனைச் சொற்கள் (conditional words)
இயல்பு/விகாரப் புணர்ச்சி (compound words)
ஒப்பீட்டு அடைகள் (positive/comparative/superlative degrees)
தொடர்வினைகள் (continuous tense)
வினாச் சொற்கள் (interrogative words)
எழுவாய்/பயனிலை/செயப்பாடு பொருள் (subject/object/predicate)
தனி மற்றும் கூட்டு வாக்கியங்கள் (simple and compound sentences)
கலப்பு மற்றும் கதம்ப வாக்கியங்கள் (complex and complex-compound sentences)
வினா வாக்கியங்கள் (interrogative sentences)
செய்வினை, செயப்பாட்டு வினை (active/passive voices)
இணைப்புச் சொற்கள் (conjunction words)